உத்தர பிரதேசத்தில் வீதியில் மூடுபனி கண்ணை மறைக்கும் அளவுக்கு படர்ந்திருந்ததால் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடுமையான மூடுபனியும் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் வீதிகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரிவதில்லை என்பதனாவ சாரதிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் மூடுபனி படர்ந்த வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment