அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கார் சாரதி ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். கொலையாளயும் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மெல்போர்ன் நகரின் மத்திய பகுதியான ஸ்வான்ஸ்டன் தெருவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க வந்த காவல்துறையினரையும் அவர் கத்தியால் குத்த முயன்றதால் அந்த நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு கைது செய்து காயங்களுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தத் தாக்குதலானது ஒரு பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக காவல்துறையினர் ; தெரிவித்துள்ளனர்
Add Comment