இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது…

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட  வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் சற்று முன்னர் குறித்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் நடைபெற்ற விடயங்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று முடிவுக்கு வந்துள்ளன.
பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்த விடயம் அரசியலமைப்புக்கு எதிரான செயல் என்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடும என்றும் தெரிவிக்கப்பட்டு 11 கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.  அத்துடன் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க, உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அமர்வுகளை நடாத்தியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக நியனம் செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் அரசியல் நெருக்கடி மிகுந்ததாக மாறியது. 14ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்த ஜனாதிபதி பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து ஜனவரி 5இல் தேர்தல் நடாத்தப்படும் என்று அறிவித்தார்.
பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டதாக ஐ.தே.க. குற்றஞ்சாட்டியது. உறுப்பினர்கள் பேரம் பேசப்பட்டமை மற்றும் முன்னாள் சபாநாயகரின் பாரபட்சமான செயற்பாடு ஆகியவை காரணமாகவே பாராளுமன்றத்தை கலைத்தாக ஜனாதிபதி கூறினார்.
நேற்று மாலை இதற்கான தீர்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சட்ட மா அதிபர் ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணைகள் இன்று காலைவரை ஒத்தி வைக்கப்பட்டன.
இந் நிலையில் மனுக்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக சட்டமா அதிபர் இதன்போது வாதிட்டார்.
இன்றைய நாள் முழுவதும் கடுமையான வாதங்கள் இடம்பெற்றன.  இந்நிலையில் இன்று மாலை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது…

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7 ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபகஸவை பிரதமராக நியமித்தார். இச் சம்பவத்தின் காரணமாக இலங்கையின் யார் பிரதமர்? என்ற குழப்ப நிலை, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும்  நிலவி வருகிறது. இவ்வாறான குழப்ப நிலை தொர்ந்த போது  ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை  தான்தோன்றித்தனமானது எனவும், அரசியல் அமைப்பிற்கு எதிரானது எனவும் தெரிவித்து   15 மனுக்கள் உச்ச நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டன. பாராளுமன்றம் கலைத்தமை சரியானதே எக் கூறி   5 மனுக்கள் ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டும் இரண்டாவது நாளாகவும் விசாரணைகள் இடம்பெற்றன.

குறித்த தீர்மானம் மிக்கதோர் வழக்கு விசாரணை பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், இலங்கை நேரம்  மாலை 5 மணி வரை குறித்த அமர்வு  ஒத்திவைக்கப்பட்டது.

இதே வேளை 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது.

ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானதல்ல என்று சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.