நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம் இடம்பெற்றது. கடந்த 08ஆம் திகதி கந்தசஷ்டி ஆரம்பமாகியது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாளான நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு முகங்கள் கொண்ட சூரர்களை வதம் செய்தார். அதனை தொடர்ந்து விழாவின் இறுதி நிகழ்வாக இன்று வள்ளி தெய்வானை சமேத நல்லூர் கந்தனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராய் எம்பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்




Spread the love
Add Comment