இலங்கை பிரதான செய்திகள்

எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எப்படி மதிப்பளிக்க வேண்டும் மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை எப்படி செவிமடுத்துக் டே்க வேண்டும் என்பதையும் தம்மிடமிருந்து இலங்கைப் பாராளுமன்றம் கற்றுக்கொள்ள வேண்டும் என இளைஞர் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தம்மை விரக்தியில் தள்ளியிருப்பதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகள் ஒருவரை ஒருவர் தாக்குவதும் பாராளுமன்ற வளாகத்தை கேலிக்குள்ளாக்குவதையும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமையையும் நாட்டின் மதிப்பு மிகுந்த புனித ஆவணமான அரசியலமைப்பை எறிவதும் மதிப்பிற்குரிய சபாநாயகர் நாற்காலியை தாக்குவதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் மறந்துவிட வேண்டாம் என்று இளைஞர் பாராளுமன்றம் குறிப்பிட்டுள்ளது.

20 மில்லியன் மக்களை மாத்திரமின்றி, எதிர்கால சந்ததியையும் இந்த செயற்பாடு பாதித்துள்ளதாகவும் இதனால் நாடு பொருளாதார ரீதியாக பின்னடைவுகளை சந்திக்க வேண்டிய துயரம் ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டின் இளைஞர்கள் தரப்பு என்ற ரி்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இச் செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் அதற்கான பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் இளைஞர் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பிலும் கருத்துக்களுக்கு எவ்வாறு செவி சாய்த்து மதிப்பளிப்பது என்பது தொடர்பிலும் இளைஞர் பாராளுமன்றத்தின் அமர்வுகளை பார்வையிட்டு, அதலிருந்து தேர்ச்சிகளையும் அனுபவங்களையும் கற்றுக்கொள்ளுமாறும் இளைஞர் பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • சில பாராளமன்ற உறுப்பினர்கள் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றை பின்பற்றாமல் சண்டியர்கள், காடையர்கள் மற்றும் காவாலிகள் போல் நடந்துள்ளார்கள். கத்தி, மிளகாய்த்தூள் கலந்த திரவம், புத்தகங்கள் மற்றும் கதிரைகள் போன்றவற்றால் தாக்கியுள்ளார்.

  பல பாராளமன்ற உறுப்பினர்கள் ரசிகர்கள், பார்வையாளர்கள் மற்றும் சோகமுற்றவர்கள் போல் காட்சி அளித்தார்கள்.

  எஞ்சியவர்கள் பாராளுமன்றத்தை விட்டுச் சென்றார்கள்.

  இவற்றை எல்லாம் பார்த்து மஹிந்த மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

  இவைகள் பாராளுமன்றம் கூடிய நோக்கத்தை முறையாக அடைய விடாமல் செய்துள்ளது. இதை மாற்றியமைக்க சிக்கல்களுக்கான காரணங்களை கூடிய விரைவில் கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

  தவறாக நடந்துகொண்ட எம்.பி.க்கள் திருத்தப்பட்டு பாராளுமன்ற கலாசாரத்தை பின்பற்றும் நல்ல பண்புள்ளவர்களாக மாற்றப்பட வேண்டும்.

Share via
Copy link
Powered by Social Snap