Home இலங்கை யாழ். மண்டைத்தீவில் எரிக் சொல்ஹெய்ம்!

யாழ். மண்டைத்தீவில் எரிக் சொல்ஹெய்ம்!

by admin

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸூம் யாழ். மண்டைத்தீவு பகுதிக்கு நேற்று புதன்கிழமை (01.04.24) கள விஜயத்தில் ஈடுபட்டனர்.

கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில் கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கவும், நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கவும் இப்பிரதேசத்தில் வளரும் கண்டல் தாவரங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தவகையில் அவ்வாறான பங்களிப்பை அதிகரிக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More