இலங்கை பிரதான செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 32ஆம் அணி நண்பர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 32ஆம் அணி நண்பர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் முதலாம் நாள் நடைபெறவுள்ளது.  இதன் போது  சுமார் நான்கு ஆண்டுகளின் பின்னர்  அனைத்து தோழர்களும் தோழிகளும் அவர்தம் இணையர்களும் ஒன்றுசேரும் அற்புதமான  நிகழ்வு அவ்வணி ஏற்பாட்டாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
 குறித்த நிகழ்வில் கடந்த கால அசாதாரண சூழ்நிலையினால் வாழ்வாதாரங்களை இழந்த   மக்களுக்கு  அறச் சேவைகளை செய்வதற்கான ஒரு நிதியத்தை உருவாக்கி குறித்த  அணியைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் புலம்பெயர் நண்பர்களினது உன்னதமான ஒத்துழைப்பில் தொடர்ச்சியாக உதவிகளை பெற்றுக்கொடுப்பதுடன் குறித்த  அறச்சேவை அமைப்பினை  எதிர்காலத்தில் மிகப் பலம்வாய்ந்த தொண்டுநிறுவன அமைப்பாக  செயற்பட  அவ்வணியினர் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
‘கிளைகளாய் பரந்து வேர்களாய் படர்வோம்’ என்பது எமது மகுட வாசகமாக அமையும். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்றான் பாரதி அதே வழியில் எங்கெங்கு நாம் இருந்தாலும் தாயகத்து மக்களை இயன்றவரை தாங்கும் உறுதிவாய்ந்த ஓர் மரமாக வேரூன்றி நிற்போம். எமது அணிக்கு வேரூன்றி என்ற நாமம் 2014இல் சூட்டப்பட்டதும் இதன் வழியிலேயாகும் என நான்கு வருடங்களின் பின் பலவித எதிர்பார்ப்புக்கள் கனவுகளோடு   பிரிந்து சென்ற  அணியினர் கூறியுள்ளதுடன்  மீண்டும்  பசுமை நிறைந்த நினைவுகளை இந்நிகழ்வில் மீட்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
பாறுக் ஷிஹான்
 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.