பாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய அமர்வின் போதும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்காக ஊடகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய சபை அமர்வில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தாம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற போவதில்லை என, ஆளும் தரப்பினர் அறிவித்திருந்தனர்.இதேவேளை பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமை பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 500 காவல்துறையினரும் இரண்டு கலகம் அடக்கும் காவல்துறை குழுவினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment