0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான தீர்மானத்தை எடுக்காமையின் காரணமாக, நாடு சீரழிந்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (27.11.18), கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பவர்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சிறிசேன தொடர்ந்தும் இவ்வாறான முடிவுகளை எடுத்து வந்தால் நாடு முழுமையாக சீரழிந்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love