இந்தியா பிரதான செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது


பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ரொக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கமராக்கள் கொண்ட செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.
அத்துடன் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

44.4 மீற்றர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் 230.4 தொன் எடை கொண்டதாகும். இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ரொக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று காலை ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.