
அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் கடந்த 24ம் திகதி உருவான காட்டுத்தீயானது அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் கட்டுக்கடங்காமல் பரவி வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் 22 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு அழிவடைந்துள்ள நிலையில் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் எனினும் அங்கு நிலவி வரும் மோசமான வானிலையால் இந்த பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment