விஜய்யுடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்ற நாசரின் மகன் பைசலின் ஆசையை நனவாக்கியுள்ளார் விஜய். இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான நாசரின் மகன் பைசல் கடந்த 2013ஆம் ஆண்டில் ஈசிஆர் வீதியில் நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்தார். நீண்ட நாட்களாக நினைவு திரும்பாத நிலையில் இருந்த அவர் தற்போது நலமடைந்து வருகிறார். தற்போதும் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பைசல் நடிகர் விஜயின் ரசிகர். இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் வீட்டுக்குச் சென்று பைசலையுடன் நேரம் செலவிட்டு வருகிறார். பைசல் நலம் பெறுவதற்கு விஜய் பைசல்மீது காட்டும் அன்பும் அரவணைப்பும்கூட காரணமாக அமைந்துள்ளது.
இதேவேளை நேற்று பைசலுக்கு பிறந்தநாள். தனது பிறந்தநாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என விரும்பியிருக்கிறார். இத்தகவல் விஜய்க்கு தெரியவரவும் நாசரின் வீட்டுக்கு திடீரென்று சென்ற விஜய் பைசலுக்கு தன்னுடைய வரவை பரிசா அளித்துள்ளார்.
விஜய் முன்னிலையில் பைசல் பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இப்புகைப்படங் களை நாசரின் மனைவி கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “விஜய் அண்ணாவுடன் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற உன் கனவு நனவாகியுள்ளதே” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு திரைப்படங்களில் விஜயும் நாசரும் இணைந்து நடித்துள்ளனர். விஜயிற்கு நாசர் தந்தையாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் பைசல்மீது காட்டும் அன்பையும் அரவணைப்பையும் கண்டு பைசலின் தாயார் கமீலா நாசர் நெகிழச்சியடைந்து பதிவிட்டுள்ளார்.
Spread the love
Add Comment