இலங்கை பிரதான செய்திகள்

இடைக்கால தடையுத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது….

தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை….


மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளை தொடருவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஸ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையுத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், இதுபோன்ற தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை என்றும் மனுதாரர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரரான மஹிந்த ராஜபக்ஷ தனது மேன்முறையீட்டில் கூறியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.