இலங்கை பிரதான செய்திகள்

வவுணதீவு சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை :

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றனர்.

வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த காவல்துறையினர் இருவர் இனந் தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.