உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்க செனட்டில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சவூதி அரசு கண்டனம்….

துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டமை தொடர்பில் சவூதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க செனட்சபையில்  நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சவூதி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜமால் கொல்லப்பட்டதற்கு சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க செனட்சபை கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

ஆத்துடன் ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து சவூதி அரேபியா போர் ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அந்த தீர்மானத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சவூதி அரசு தமது நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் வகையில் மேற்படி தீர்மானம் அமைந்துள்ளது என கண்டனம் வெளியிட்டுள்ளது.

மேலும் வளைகுடா பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் சவூதி அரேபியாவுக்கு இருக்கும் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் வகையிலும், போதிய ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை மட்டுமே அடிப்படையாக வைத்தும் அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை சவூதி அரேபியா அரசு நிராகரிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், தங்கள் நாட்டின் தலைவரை அவமதிக்கும் வகையிலும், உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் விதமாகவும் சுமத்தப்படும் எவ்விதமான – அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் தங்கள் அரசு புறக்கணிக்கிறது எனவும் சவூதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.