சினிமா பிரதான செய்திகள்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சசிகலாவின் வேடத்தில் சாய் பல்லவி


முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது தோழியான சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.  மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படத்தை  பல்வேறு இயக்குனர்கள் திரைப்படமாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் சுவரொட்டி (பர்ஸ்ட்லுக் போஸ்டர்) ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5ஆம் திகதி வெளியானது. இதேவேளை படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் இயக்குநர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்குகின்றனர். இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை தொடராக உருவாக்குகிறார்.

இதில் விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் ஏற்கனவே சில்க் ஸ்மித்தா வாழ்க்கை படமான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பாராட்டை பெற்றவர். தற்போது என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சரானது வரையான சம்பவங்களை மையப்படுத்தி இப் படத்தை உருவாக்குகின்றனர். இதில் சசிகலாவாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.