பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கு 660 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கினை வழங்கியுள்ள நியூசிலாந்து…


இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் 2 வது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறுகின்ற நிலையில் 660 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கினை நியூசிலாந்து இலங்கைக்கு வழங்கியுள்ளது  முதல் இனிங்சில் நியூசிலாந்து 178 ஓட்டங்களையும் இலங்கை 104 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து தமது 2 வது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 585 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. நியூசிலாந்து அணி சார்பாக டொம் லதெம் 176 ஓட்டங்களையும் ஹென்றி நிகலஸ் ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்நிலையில் 660 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்னும் நிலையில் இலங்கை அணி தற்போது தனது 2 வது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வருகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.