இலங்கை பிரதான செய்திகள்

“நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம்.” “காணாமல் ஆக்கப்பட்டவர்களை, தேர்தல் கோசங்களாக்காதீர்கள்…”

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தாரதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிராச்சாரத்திற்கு பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் கிளிநொச்சி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினதும், கிளிநொச்சி சங்கத்தினதும் தலைவியுமான யோகராசா கனகரஞ்சனி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

“யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களை கடந்த நிலையிலும் எங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை, நாங்கள் நம்பிய எங்களது பிரதிநிதிகளாலும் எங்களுக்கு ஏமாற்றம், இந்த நிலையில் நாங்கள் எங்களது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் (31.12.2017)) 315ஆவது நாள் இந்த 315 ஆவது நாளாகவும் இரவு பகலாக நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வீதியில் போராடி வருகின்றோம். நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம்.”

“இந்த புதிய வருடத்திலாவது எங்களது விடயத்தில் அரசியல் தரப்பினர்கள், அக்கறைச் செலுத்த வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உணா்வுகளை புரிந்துகொண்டு நாட்டின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் உரிய பதிலை வழங்க வேண்டும், அதற்கு தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனக்கோரிக்கை விடுத்த அவா்

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியாதவர்கள் எங்களின் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது அதனை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களா நாங்கள் விரும்பவில்லை ஏற்றுக்கொள்ளமாட்டோம்” எனவும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.