சினிமா பிரதான செய்திகள்

மாதவனின், அக்‌ஷன் அட்வென்ஜர் (Adventure) படம்…

வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து நடித்து வரும் நடிகர் மாதவன், அடுத்து அக்க்ஷன் அட்வென்ஜர் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி சுற்று படத்துக்கு பின்னர் மாதவன் மீதான நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடப்பிடிப்பு முழுமையாக வெளிநாடுகளின் பல்வேறு அழகான நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை ஒரஞ்சு மிட்டாய், றெக்க படங்களை தயாரித்த காமன்மேன் கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது எனவும் தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது எனவும் இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் ஹாரி பொட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பகுதி 2 மற்றும் ட்ராகுலா அண்டோல்டு படங்களில் பணியாற்றிய ஹொலிவூட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

ஏனைய கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது எனவும் இந்த படத்தை குழந்தைகளுக்கான படமாகவும் உருவாக்குகிறோம் எனவும் இது ஒரு குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு படமாகும் எனவும் தெரிவித்த இயக்குனர் சற்குணம் எதிர்வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

இயக்குனர் சற்குணம்

Add Comment

Click here to post a comment

Leave a Reply