இந்தியா சினிமா பிரதான செய்திகள்

தமிழ் சினிமா நடிகர்களில் சரியாக வரி செலுத்துவது நடிகர் அஜித் (தலை) மட்டுமே…


தமிழ் சினிமா நடிகர்களில் சரியாக வரி செலுத்துவது நடிகர் அஜித்  மட்டுமே என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விமர்சனம் செய்த அன்புமணி ராமதாஸ், நடிகர்கள் சரியாக வாங்கும் பணத்திற்கு வரி செலுத்துவதில்லை எனவும் தனக்குத் தெரிந்து அஜித் மட்டும்தான் சரியாக வரி செலுத்துகிறார் எனவும் தெரிவித்துள்ளர். இப்படி வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள் எப்படி நேர்மையான ஆட்சியை வழங்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை அஜித் என்று அவர் சொன்னபோது கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டியதற்கு இப்படி  நடிகர்களுக்கு கைதட்டி, கட்சி தொடங்கினால் நாடு நாசமாகத்தான் போகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply