உலகம் பல்சுவை பிரதான செய்திகள்

அவுஸ்திரேலியாவின் முதலாவது சட்டபூர்வ ஓரின சேர்க்கை திருமணம்…

அவுஸ்திரேலியாவில் விளையாட்டு வீரர்கள் லூக் சுல்லிவர்ன், கிரேய்க் பர்ன்ஸ் ஆகியோர் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டனர். அவுஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட ஒப்புதல் கடந்த டிசம்பரில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அத்லெடிக் வீரர்கள் 23 வயதுடைய லூக் சுல்லிவர்ன், 29 வயதுடைய கிரேய்க் பர்ன்ஸ் ஆகியோர் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் அவுஸ்திரேலிய நேரப்படி நேற்று நள்ளிரவு நியூ சவுத் வேல்ஸ் நகரில் நடந்தது. திருமணம் முடிந்ததும் இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டனர். அப்போது தங்களது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

தங்களது திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டு மற்ற ஓரின சேர்க்கையாளர்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பெற்றனர். சட்ட அங்கீகாரம் அளித்த பின் அவுஸ்திரேலியாவில் நடந்த முதல் ஓரினசேர்க்கை திருமணம் என்ற பெருமையை இந்த ஆண் தம்பதி பெற்றுள்ளது. ஓரினசேர்க்கை திருமணம் செய்துள்ள கிரெய்க்பர்ன்ஸ் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளார். இவர்களை தொடர்ந்து மெல்போர்ன் நகரில் டயானா- தீனே டுபைரோ இணையும் ஓரினசேர்க்கை திருமணம் செய்து கொண்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply