இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு!

இந்தியாவின் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நடந்துள்ளதாகவும் இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அனந்த்நாக் மாவட்டத்தின் லார்னூ பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 2 தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடைபெற்ற இடத்தைத் தற்போது இந்திய பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாகவும். அங்கு மறைந்துள்ள தீவிரவாதிகளைப் கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்த விவரங்கள் எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.