சினிமா பிரதான செய்திகள்

மணிரத்னம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி


மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள பெயரிடப்படாத புதிய படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை தங்களுடைய 17-வது தயாரிப்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முன்னதாக, விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது சிறிய அளவிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது படம் முழுக்க விஜய் சேதுபதி வரும் அளவுக்கு மணிரத்னம் கதையில் மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் வேத’ படத்திற்குப் பின்னர் விஜய் சேதுபதிக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், அவரது கதாபாத்திரத்தை விரிவாக்கம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers