Home உலகம் மெக்ஸிக்கோவின் சில நகரங்களுக்கு பயணம் செய்வது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

மெக்ஸிக்கோவின் சில நகரங்களுக்கு பயணம் செய்வது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மெக்ஸிக்கோவின் சில நகரங்களுக்கு பயணம் செய்வது குறித்து அமெரிக்கா எச்சரிககை விடுத்துள்ளது. மெக்ஸிக்கோவின் ஐந்து மாநிலங்களில் இடம்பெற்று வரும் வன்முறைகள் குழு மோதல்களினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிக்கோவின் கொலிமா(Colima, ), குரேரெரோ (Guerrero ) , மிக்கோகான(Michoacán) , சினாலோவா ( Sinaloa) மற்றும் ரமுலிபஸ் ( Tamaulipas ) மாநிலங்களில் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு நிகரான ஆபத்துக்கள் இந்த மாநிலங்களில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவில் அதிகளவான கொலைகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More