பிரதான செய்திகள் விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.


இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் மார்ச் மாதம் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஒக்லாந்தில் மார்ச் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் லான்ஷையர் அணியை சேர்ந்த 24 வயதுதான துடுப்பாட்ட வீரரான லயிம் லிவிங்ஸ்டோன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார் என்பதுடன் உடல் உபாதையிலிந்து மீண்டுள்ள வேகப் பந்து வீச்சாளர் மார்க் வுட்டும் அணியில் இணைக்கட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply