சினிமா பிரதான செய்திகள்

அடுத்தடுத்து பெரும் இயக்குநர்களின் படங்களில் சிம்பு!


அடுத்து பெரும் இயக்குனர்களில் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன். இளைய வயது நடிகராக முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் அண்மைய நடிகர் சிலம்பரசன் என இந்திய ஊடகம் ஒன்று விபரித்துள்ளது.  கெளதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அண்மையில் வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இதனையடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் சிம்பு நடிக்கின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இது தவிர சிம்புவே இயக்கி, நடிக்கவுள்ள படத்திற்கான பின் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிம்பு புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ‘அமர்க்களம், ஜெமினி, வசூல் ராஜா MBBS, அசல்’ போன்ற படங்களை இயக்கிய சரண் இயக்கவுள்ளார்.


வெகு விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் பின்னர் சிம்புவுக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்ட நிலையில் சிம்புவின் நகர்வு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers