உலகம் பிரதான செய்திகள்

முகநூலில் (FACE BOOK) ஏற்படப்போகும் மாற்றங்கள் செய்திப் பகிர்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…..

மார்க் சக்கர்பெர்க்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமூக வலைத்தளமான பேஸ்புக் Face book தமது News feed ல்  செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டு வருகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்கள், Brandsகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் மிகவும் குறைவான முக்கியத்துவத்தையே பெறும் என தெரிய வருகிறது.

இதற்கு மாறாக,  பேஸ்புக் (Face book) வலைதளத்தை பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பகளுக்கு இடையில் உரையாடல்களை உருவாக்கும் பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என  பேஸ்புக் (Face book)  நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி Mark Zuckerberg  தன்னுடைய  பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதன் விளைவாக,  பேஸ்புக் (Face book) வலைதளத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளின் முக்கியத்துவம் குறைவதை காணலாம் என இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எதிர் வரும் வாரங்களில், இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

வர்த்தக நிறுவனங்கள், பிராண்ட்கள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள்,  குவிந்து ஒவ்வொருவரையும் இணைப்பதற்கு வழி செய்யும் தருணங்களை ஆக்கிரமிக்கின்றன என,  ஆய்வுகள் தெரிவிப்பதாக Mark Zuckerberg   குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நலவாழ்வை வளர்ப்பதற்கு  பேஸ்புக் (Face book) மிகவும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புணர்வை அவரும், அவருடைய குழுவினரும் உணர்ந்துள்ளதாக Mark Zuckerberg   தெரிவித்திருக்கிறார்.

பொது மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டுமெனில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை பற்றி நெருங்கிய தொடர்புடைய குழுக்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் நடைபெறுவதைபோல இந்த கருத்துக்கள் சமூக ஊடாடலை தூண்டுவதாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பேஸ்புக் (Face book) நிறுவனம் பதிவிட்டுள்ள இன்னொரு தனிப்பட்ட பதிவில், அதிக உரையாடல்களை தூண்டுகின்ற காணொளி பதிவுகளை மேலதிக எடுத்துக்காட்டாக வழங்கியுள்ளது. “இத்தகைய மாற்றங்களை உருவாக்குவதன் மூலம், மக்கள், பேஸ்புக் (Face book)  பக்கத்தில் செலவிடும் நேரம் மற்றும் இந்த வலைதளத்தில் ஈடுபடும் அளவும் குறையும்” என  Mark Zuckerberg   மேலும் கூறியுள்ளார்.

“ஆனால்.பேஸ்புக் (Face book)  பக்கத்தில் செலவிடப்படும் நேரம் அதிக மதிப்புடையதாக இருக்குமெனவும் நான் எதிர்பார்க்கிறேன்” என  Mark Zuckerberg  தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு  பேஸ்புக் (Face book)  வலைதளத்தை சீரமைக்கப் போவதாக முந்தைய பதிவு ஒன்றில் சாக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.

ஃபேஸ்புக்
படத்தின் காப்புரிமைDANIEL LEAL-OLIVAS/AFP/GETTY IMAGES

பேஸ்புக் (Face book)  வலைதள பயன்பாட்டாளர்களை துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது மற்றும் பேஸ்புக் (Face book)  வலைதளத்தில் செலவிடப்படும் நேரம் சிறப்பானதாக செலவிடப்படுவதை உறுதி செய்ய விரும்புவதாக அவர் கூறியிருந்தார். தேசிய அரசுகளிடம் இருந்து  பேஸ்புக்கை (Face book)   தற்காத்துகொள்ளவும் அவர் உறுதி தெரிவித்திருந்தார். ரஷ்யா உள்பட சில நாடுகள் சமூக வலைதளங்களிலுள்ள உள்ளடக்கங்களை தங்களுடைய சுய ஆதாயங்களுக்காக பயன்படுத்த முயற்சி செய்திருந்ததாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.

“இதுவொரு மிகவும் முக்கியமான மாற்றம்” என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் நியெமென் இதழியல் ஆய்வகத்தின் லவ்ரா ஹசாடு ஓவென் கூறியிருக்கிறார். “செய்தி நிறுவனங்களை இது பெரிதாக பாதிக்கப்போகிறது. நம்முடைய News feedல்  தலைகாட்டும் அதிக அளவிலான செய்திகள் குறையப்போகின்றன” என்று அவர் கூறியுள்ளார். என்றாலும். பேஸ்புக்கின் (Face book)  புதிய அல்காரிதம் ஊக்குவிக்கவுள்ள உரையாடல்களைத் தூண்டும் பதிவுகள் எவை என்பதை இந்த நிறுவனம் இன்னும் தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் ஓவென் மேலும் கூறியுள்ளார்.

அத்தகைய பதிவுகள் முடிவில் மிகவும் சூடான விவாதங்களை ஏற்படுத்தும் சர்ச்கைகுரிய ஒன்றாக இருக்கலாம் அல்லது சில குறிப்பிட்ட தலைப்புகளில் பிறர் அதிக அளவில் ஈடுபாடு காட்டுகின்ற குழுவின் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கங்களாக இருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“வெளிப்படையான ஏற்பு வரவேற்கத்தக்கது”

சமீபத்திய பொது கண்காணிப்பில் சமூக வலைதளங்கள் மிகவும் சிக்கலான இடத்தில் தற்போது உள்ளன என்று தொடர்பியல் மற்றும் இதழியலுக்கான தென் கலிபோர்னிய அன்னன்பெர்க் பல்கலைகழகத்தை சோந்த கரபிரியேல் கான் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சிக்கல்களின் மத்தியில்  (Face book)  பேஸ்புக் தன்னை நிலைநிறுத்த முயல்கிறது. இது எப்போதுமே முன்வைத்து வருகின்ற தன்னுடைய பிராண்ட மதிப்பை சீரமைக்க முயற்சி மேற்கொள்கிறது.என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். சமூக நலம் தொடர்பில்  (Face book)  பேஸ்புக்குக்கு உள்ள அதிகாரம் குறித்து சக்கர்பெர் வழங்கிய ஏற்பாக இந்தப் பதிவு உள்ளது என கான் மேலும் கூறியுள்ளார். இருப்பினும், இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் அளிக்கவுள்ள விஷயங்கள் பார்வைகளையும், உரையாடல்களின் இயல்பையும் மேலும் சீர்குலைக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

(Face book)   எவ்விதமான மதிப்பீடுகளின் அடிப்படையில் தமது அல்கோரிதத்தை (எந்த செய்திகள் நியூஸ் ஃபீடில் தெரியவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மென்பொருள்) வடிவமைக்கிறதோ அந்த மதிப்பீடுகளை விவாதத்துக்கு உள்ளாக்கவேண்டும் என்கிறார் அவர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers