இலங்கை பிரதான செய்திகள்

ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் வழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை – மனித உரிமை கண்காணிப்பகம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தத்தவறியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் தொடர்பான குற்றச் செயல்கள், மனித உரிமை பாதுகாப்பு, மனித உரிமைகளை உறுதி செய்தல் உள்ளிட்டன குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடுதல் போன்ற விடயங்களில் காணப்பட்ட கட்டுப்பாடுகளை ஓரளவு அரசாங்கம் தளர்த்தியுள்ளது என்ற போதிலும், காலமாறு நீதிப் பொறிமுறைமை எதிர்பார்க்கப்பட்ட அளவு வேகத்தில் முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் உறுதிமொழி வழங்கியிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கம் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல் போன்ற விடயங்களில் மிகுந்த மந்த கதியில் இயங்கி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • ஐ.நா. மனித உரிமைச் சபையின் தீர்மானங்களை அமுல்படுத்தத் தேவைப்படும் கால அட்டவணை ஓன்று உருவாக்கப்படவில்லை. போதுமான அழுத்தங்கள் தமிழ்த்தரப்பினால் அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படவில்லை. இனியாவது அட்டவணையை உருவாக்கி, அழுத்தத்தைக் கொடுத்து, தீர்மானங்களை அமுல்படுத்தி வைக்க வேண்டும். இதை, தமிழ் தலைவர்களும், தமிழ்க் கட்சிகளும், தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் மற்றும் ஆர்வமுள்ள தமிழர்களும் ஒன்றுசேர்ந்து செய்ய வேண்டும்.