பிரதான செய்திகள் விளையாட்டு

கரோலின் வோஸ்னியாக்கி அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரின் காலிறுதிக்கு தகுதி

அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரின் காலிறுதி போட்டிக்கு கரோலின் வோஸ்னியாக்கி (Caroline Wozniacki )  தகுதி பெற்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி   முதல்தடவையாக காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான மடன்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியும் ஸ்சுலோவாக்கியாவின் மக்டலினா ரைபரிகோவா (Magdalena Rybarikova.) வும் போட்டியிட்டனர்.

இதில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கரோலின் வோஸ்னியாக்கி காலிறுதி போட்டியில் ஸ்பெயினின் கர்லா சுராசுடன் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.