குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எனக்கு எதிராக சேறு பூசும் பணி நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஒரு தரப்பு இவ்வாறு தமக்கு எதிராக சேறு பூசுவதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முடியாத காரணத்தினால், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் சேறு பூசும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் மஹிந்த உள்ளிட்டவர்கள் தமக்கு எதிராக சேறு பூசுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனவும், அது பற்றிய முழு விபரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் இணைய தளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தமக்கு எதிராக சேறு பூசப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment