பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் பெடரர் – சங் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்னில் நடைபெற்றுவரும்  அவுஸ்திரேலிய ஓபன் ரென்னிஸ்  தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற ரோஜர்  பெடரர், ஹியோன் சங்   உள்ளிட்டோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  இன்றைய போட்டியின் போது செக் குடியரசின் தோமஸ் பெர்டிச்சை எதிர்கொண்ட ரோஜர் பெடரர், 7-6, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பெடரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதேபோன்று இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் தென்கொரியாவின் ஹியோன் சங், அமெரிக்காவின் சாண்ட்கிரெனை எதிர்கொண்டு 6-4, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றீட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். நாளை நடைபெறவுள்ள அரையிறுதி சுற்று போட்டிகளில் சிலிச் – எட்மண்ட்டையும் சங் – பெடரரையும் எதிர்த்து போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.