உலகம் பிரதான செய்திகள்

வீசா இன்றி தங்கியிருப்போருக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வீசா இன்றி; தங்கியிருப்போருக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது. வீசா சட்டங்களை மீறி குவைத்தில் தங்கியிருப்போருக்கே அந்நாட்டு அரசாங்கம் இவ்வாறு பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது. குவைத்தின் உள்துறை அமைச்சினால் இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரையில் இந்த பொது மன்னிப்புக் காலம் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப்பகுதியில் அபராதம் எதுவும் இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட ஏனைய நாட்டுப் பிரசைகள் நாடு திரும்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாட்டை விட்டு செல்லும் வெளிநாட்டுப் பிரசைகள் மீளவும் சட்ட ரீதியாக குவைத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.