இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

எம்மை விமர்சனம் செய்வோரிடம் பணமோ திட்டங்களோ கிடையாது – ரணில் விக்ரமசிங்க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிலர் தம்மை ஏசியும், விமர்சனம் செய்து வருகின்ற போதிலும் அவர்களிடம் எவ்வித திட்டங்களோ அல்லது பணமோ கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ஹட்டனில் இன்றைய தினம் நடைபறெ;ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மட்டத்தில் செய்யப்படும் அபிவிருத்தி பணிகளை கீழ் மட்டத்திற்கு கொண்டு வருவது எமது திட்டமாக உள்ளது எனவும், கீழ் மட்ட அபிவிருத்தி என வகையில் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளதுடன், பொகவந்தலாவ நகரை சுற்றுலா உல்லாச நகரமாக மாற்றியமைப்போம் எனவுமு; அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று நுவரெலியா கொட்டகலை, அக்கரப்பத்தனை, பொகவந்தலாவ வரையிலான பிரதேசங்களை உல்லாச பிரதேசங்காளக மாற்றியமைக்கும் திட்டமொன்று உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் மேடைகளில் எவரையும் ஏசி பேசுவதில்லை எனவும், ஆனால் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விமர்சிப்பதும் மட்டுமல்லாது குறையும் கூறியுள்ளேன் எனவும்,; இது அபிவிருத்தி தொடர்புப்பட்ட விடயங்களுக்காக மாத்திரமே எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்காலத்தில் நன்மை பகிக்க கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கூடிய அக்கறைக் காட்டுவதால் இவரை தாம் விமர்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு வரை அரசாங்கத்தை நாம் கொண்டு செல்லவுள்ளோம். இந்த நிலையில் எம்மை தூசிப்பவர்கள் எங்கிருந்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பார்கள். அமைச்சர் திகாம்பரம் மட்டும் பாராளுமன்ற உறுப்பினர் பியதாஸவிடம் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான நல்ல திட்டங்கள் இருக்கின்றது. எதிர்காலத்தில் அத் திட்டங்களை பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

அதி வேக நெடுஞ்சாலைகளை அமைப்பது மட்டும் எமது கடமைகள் அல்லாது தேசிய மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலான அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார். ஆகையால் மேலும் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு திட்டமும், நிதியும் எம்மிடம் உள்ளது. வீடமைப்பு, வீதி, மின்சாரம், கல்வி வளர்ச்சி போன்றவைகளுக்கு நிதிகளும் திட்டங்களும் எம்மிடம் காணப்படுவதனால் இதனை தேசிய ரீதியில் அரசாங்கம் நகர சபை பிரதேச சபை அதிகாரங்களுடன் முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.காவின் யானை சின்னத்திற்கு வாக்களிப்பதன் ஊடாக நாம் வெற்றியீட்டியவாறு அபிவிருத்தி பணிகளை எதிர்காலத்தில் தங்கு தடையின்றி முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply