உலகம் பிரதான செய்திகள்

ரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்


ரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே போராட்டம் நடத்தச் சென்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  எதிர்வரும் வரும் மார்ச் 18ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது எனவும் பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க கூடாது எனவும் அலெக்சி நவல்னி வலியுறுத்தி வருகிறார்.

இந்த கருத்தை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரை அவர் கேட்டு கொண்டுள்ள அவர் இன்றைய தினம் மொஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற போதே அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று காலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் ர் அங்கிருந்த அனைத்து அறைகளிலும் தீவிரமாக சோதனையிட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றமு. வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக காவலல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.