இந்தியா பிரதான செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுர வாசலில் உள்ள கடைகளில் தீ – 30க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கரை

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில் உள்ள கடைகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது

முதலில் மூன்று கடைகளில் பற்றிய இந்தத் தீ, பின்னர் ஏனைய கடைகளுக்கும் பரவியதில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் இந்த விபத்தில் எரிந்து அழிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகம் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியும் இந்தத் தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தீ விபத்தின் காரணமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்ற போதிலும் மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply