இலங்கை பிரதான செய்திகள்

பெரும்பான்மையான இலங்கையர்கள் இனப் பல்வகைமையை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் உள்ளனர் – சந்திரிக்கா


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பெரும்பான்மையான இலங்கையர்கள் இனப் பல்வகைமையை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரசியல், கலாச்சார மற்றும் மத பல்வகைமையை ஏற்றுக்கொள்வதற்கு பெரும்பாலான இலங்கையர்கள் ஆயத்தமாகவே உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். 70ம் சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மிகுந்த பெருமையுடன் 70ம் சுதந்திர தின நிகழ்வுகளை கொண்டாடுவதாகத் தெரிவித்துள்ளார். அனைத்து பிரஜைகளுக்கும் சமவுரிமைகளை வழங்கும் முனைப்புக்களில் இந்த அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகவும் அதனை அனைத்து இலங்கையர்களும் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers