சினிமா பிரதான செய்திகள்

விசுவாசத்தில் அஜீத்துக்கு ஜோடி யார்?


விசுவாசம் படத்தின் கதாநாயகி நடிகர் அஜீத் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விசுவாசம். விசுவாசம் படத்தின் கதாநாயகி யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு வரும் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இதுவரை கதாநாயகி குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.


அதேநேரம் கீர்த்தி சுரேஷ் , ஆத்மிகா போன்றோர் கதாநாயகியாக நடிப்பார்கள் எனவும் இடைக்கிடை தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்தநிலையில் விக்ரம் வேதா  ,ரிச்சி  படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இனிமேல் வருடத்துக்கு ஒரு படத்தில் நடிப்பது என முடிவு செய்துள்ள அஜீத் அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply