உலகம்

வடக்குக்கு ஒதுக்கப்படும் நிதியில் 60 வீதம் மீள திரும்புகின்றது – ஜனாதிபதி.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கில் மீள் குடியேறிய மக்களுக்கு வீடமைத்து கொடுக்க என ஒதுக்கிய நிதியில் 60 வீதமான செலவு செய்யப்படாமல் மீள திரும்பி உள்ளது. என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.  யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும்தெரிவிக்கையில்
வடக்கு அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் பணம், பெருமளவானவை செலவு செய்யப்படாமல் மீள வருகின்றது. நாங்கள் அரசாங்கமாக இருந்து கடந்த ஆண்டு மீள் குடியேற்றத்திற்காக வடக்குக்கு அனுப்பப்பட்ட பணத்தில் நூற்றுக்கு அறுபது வீதம் செலவு செய்யப்படாமல் மீள அனுப்ப பட்டு உள்ளது.
நாங்கள் அந்த பணத்தை எதற்கு கொடுத்தோம். வீடமைக்க தான் கொடுத்தோம். அதில் முற்பது நாற்பது வீதம் மாத்திரமே செலவு செய்துள்ளனர். நான் பொய் சொல்லவில்லை. விரும்பின் நீங்கள் கணக்கு வழக்கை பாருங்கள்.  எனவே அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமையே அதற்கு காரணம் அவர்கள் ஒற்றுமை இல்லாததால் மக்களுக்கே நஷ்டம் ஏற்படுகின்றது.
தேர்தல் காலத்தில் பிரிந்து போட்டியிருகின்றார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் நாட்டுக்காக மக்களுக்காக ஒன்று சேர வேண்டும். வவுனியா சென்று இருந்தேன். அப்போது அந்த மக்கள் சொன்னார்கள் ஒரு கட்சிக்கு மாத்திரமே பணம் ஒதுக்க படுவதாக அதனை கேட்டு வேதனை பட்டேன்.நாங்கள் அரச கட்சியை பலப்படுத்த பணம் கொடுக்க வில்லை. மக்களின் கஷ்டத்தை போக்கவே பணம் கொடுக்கின்றோம்.
சில அரசியல் வாதிகள் வென்ற பின்னர் மக்களின் குரலுக்கு செவி மடுப்பதில்லை கிராமங்களுக்கு செல்வதில்லை. அதனால் தான் அந்த பணம் செலவு செய்யாமல் திரும்ப போகின்றது. இது மாற்றப்பட வேண்டும்.
இந்த நாட்டில் மீண்டும்  யுத்தம் ஏற்பட கூடியவாறு  சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களிடம் வேற்றுமை இருக்க கூடாது. இந்த மக்களின் இலக்கு நல்ல நாடாக இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்பதே. அதற்கு மக்களின் ஏழ்மையை போக்கி அவர்களை அபிவிருத்தி நோக்கி அழைத்து செல்ல வேண்டும். என மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply