சினிமா பிரதான செய்திகள்

திமிரு புடிச்சவனாய் சிலம்பாடும் விஜய் ஆண்டனி!திமிரு புடிச்சவன் என்ற திரைப்படத்திற்காக நடிகர் விஜய் ஆண்டனி சிலம்பு கற்று வருகிறாராம். இயக்குனர் கணேஷாவின் உருவாகி வரும்  திமிரு புடிச்சவன்  திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காளி’ திரைப்படத்தின் பணிகளை முடித்துக் கொண்ட விஜய் ஆண்டனி இப் படத்தை மார்ச்சில் வெளியிடும் நிலையில் தனது புதிய படத்திற்கான பெயரை இன்று அறிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கணேஷா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.இப் படத்தின் சண்டைக்  காட்சிகளுக்காக  விஜய் ஆண்டனி சிலம்பு கற்று வருகிறார் . காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிக்கும் முதல் படமாக அமையும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் இயக்குனர்  கணேஷா, “சமகால இளைஞர்களின் நோக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் படமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply