உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

கனேடியர் ஒருவர், ரஸ்ய பயிற்றுவிப்பாளரை அவமரியாதை செய்ததாகக் குற்றச்சாட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கனேடியர் ஒருவர் ரஸ்ய பயிற்றுவிப்பாளரை அவமரியாதை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஊக்க மருந்து குற்றச்சாட்டு காரணமாக ரஸ்யாவினால் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது, எனினும் ஊக்கமருந்து பபயன்பாட்டுடன் தொடர்புபடாத ரஸ்ய வீர, வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் தென் கொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சுயாதீன அடிப்படையில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் கனேடிய பிரதிநதிகள் குழுவொன்றின் உறுப்பினர் ஒருவர், ரஸ்ய பயிற்றுவிப்பாளர் ஒருவரை மரியாதை குறைவாக பேசியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  அதேவேளை இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோருவதாக கனடா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply