இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

அர்ஜுனுக்கு உள்ள தனி திறமையை அடையாளம் காண வேண்டும் – சச்சின்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் இளம் வீரராக வளர்ந்து வருகிறார். தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் அர்ஜுன் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும்; இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்று வருகிறார்.

அத்துடன் ஹொங்காய் அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்ப வீரராக களமிறங்கி 27 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பெற்றதுடன் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் அர்ஜுனை தன்னுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் அவருக்கென உள்ள தனி திறமையை அடையாளம் காண வேண்டும் எனவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உiராயற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாழ்க்கையை தீர்மானிக்க தான் அர்ஜுனுக்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளதாகவும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி விளையாட வேண்டும் எனவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply