இந்தியா பிரதான செய்திகள்

ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறந்துவைப்பு…

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த உருவப்படத்தினை பேரவைத் தலைவர் பி.தனபால் திறந்து வைத்துள்ளார். ஒயில் பெயின்டிங் முறையில் சென்னை கவின் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த உருவப்படத்தின் கீழ் ஜெயலலிதா அடிக்கடி பேசும் வாசகமன அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. படத் திறப்பைத் தொடந்து ஜெயலலிதாவின் உரை பேரவையில் ஒலிபரப்பப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சராக 6 முறை பொறுப்பு வகித்த ஜெயலலிதா படம் சட்டப்பேரவையில் 11-வது தலைவர் படமாக திறக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருவள்ளுவர், ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், காந்தி, அண்ணா, பெரியார், காயிதே மில்லத், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் ஆகியோரது படங்கள் உள்ளன. அந்த வரிசையில் ஜெயலலிதாவின் படம் 11-வது படமாக திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply