உலகம் பிரதான செய்திகள்

தென் சூடான் கிளர்ச்சித் தலைவரது பேச்சாளருக்கு மரண தண்டனை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் சூடானின் கிளர்ச்சித் தலைவரது பேச்சாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் சூடானின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் ரியாக் மாச்சாரின் பேச்சாளரான ஜேம்ஸ் கடெடிற்( James Gatdet) கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் கடெட், கென்யாவிலிருந்து தென் சூடானுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். தென் சூடானின் தலைநகர் ஜூபாவில் அமைந்துள்ள உயர் நீதிமன்றினால் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் கிளர்ச்சிக் குழுவொன்றின் தலைவரது பேச்சாளருக்கு மரண தண்டனை விதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply