உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க வீரர் சாதனை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் அமெரிக்க வீரர் சோன் வைட்(Shaun White)  சாதனை படைத்துள்ளார். தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சொன் வைட் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஹால்ப்பைப் போட்டியில் தங்கம் வென்றதுடன் அவரது பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்வடைந்துள்ளது. இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சி அளி;ப்பதாக ஆனந்த கண்ணீர் மழ்க வைட் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

வைட்டின் தங்கப் பதக்கமானது, குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் அமெரிக்கா பெற்றுக்கொண்ட நூறாவது தங்கம் என்பது குறிப்பிடத்கத்கது. வைட்டின் வெற்றிக்கு பிரபல விளையாட்டு வீரர்கள் டுவிட்டர் பதிவுகளின் மூலம் வாழ்த்து கூறியுள்ளனர்.நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ், 400 மீற்றர் உலக சாம்பியன் மைக்கல் ஜோன்சன் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.