சினிமா பிரதான செய்திகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் முன்னணி நடிகை குல் ப்ரீத் சிங்


சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  `சீமராஜா’ படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடிக்கின்றார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான `வேலைக்காரன்’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை முடித்த பின்னர், `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மற்றொரு திரைப்படத்திலும் நடிக்ககிறார் சிவகார்த்திகேயன்.

இதில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கு ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெறும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.