நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவை நீதிமன்றில் முன்னலையாகுமாறு பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை இதுவரை அவரிடம் ஒப்படைக்க முடியாது போயுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை மாநகர சபையின் முன்னாள் உப தலைவர் மதுர விதானகேவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுவில் லங்கா ஈ நியூஸ் இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றினால் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment