சினிமா பிரதான செய்திகள்

அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினாருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்

அறம் திரைப்படத்தின் இயக்குனர் கோபி நயினார் இயக்கவுள்ள புதிய படத்தின் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் நாச்சியார் தரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தநிலையில் புதிதாக கோபி நயினார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் கதாநாயகனாக நடிக்க ஜி.வி.பிரகாஷ். ஒப்பந்தமாகியுள்ளார். முற்றுமுழுதாக வட சென்னையை மையமாகக் கொண்ட இப்படத்தின் முதல்கட்ட வேலையில் கோபி நயினார் இறங்கியுள்ளதாகவும் இந்தப்படத்தில் குத்துச்சண்டை முக்கிய அம்சமாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

‘செம’, ‘100 வீதம் காதல்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘ரெட்ட கொம்பு’ ஆகிய படங்களில் ஜி.வி.பிரகாஷ் கவனம் செலுத்தும் சூழலில், இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தின் குத்துச்சண்டை காட்சிகளுக்காக ஜி.வி.பிரகாஷ் பிரத்யேகமாக பயிற்சி பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.