குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சில அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் சிலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். அர்ஜூன ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, சரத் அமுனுகம மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோர் இவ்வாறு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சிலர் ஏற்கனவே புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் சிலர் இன்றைய தினம் புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கட்டார், இந்தியா, தாய்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இவர்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
Spread the love
Add Comment