இலங்கை பிரதான செய்திகள்

சரத் பொன்சேகா, சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு காவல்துறை அதிகாரிகள் எதிர்ப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். காவல்துறை திணைக்களத்தின் உயர் பதவிளை வகித்து வரும் அதிகாரிகளே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்படுவதனை காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தற்காலிக அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap