இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

இருபதுக்கு இருபது முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இடம்பெற்ற நிதாஹஸ் சுதந்திரகிண்ண இருபதுக்கு இருபது முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.

இந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து, 140 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.ஆட்டநாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது. நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கையும் பங்களாதேசும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Colombo: India’s Shikhar Dhawan plays a shot during their Twenty20 cricket match against Sri Lanka in Nidahas Triangular series in Colombo, Sri Lanka, Tuesday, March 6, 2018. AP/PTI(AP3_6_2018_000167A)

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.